பொது செய்தி

தமிழ்நாடு

புதிய 'டிரான்ஸ்பார்மர்' சேர்பாக்கத்தில் அமைப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : தண்டரை சேர்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி, நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றியம், தண்டரை சேர்பாக்கம் கிராமத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னை, பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதனால், வீட்டில் உள்ள மின் சாதனங்களை இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. எனவே, புதிய மின்மாற்றி அமைக்க, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.,

உத்திரமேரூர் : தண்டரை சேர்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி, நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

உத்திரமேரூர் ஒன்றியம், தண்டரை சேர்பாக்கம் கிராமத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னை, பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதனால், வீட்டில் உள்ள மின் சாதனங்களை இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. எனவே, புதிய மின்மாற்றி அமைக்க, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரிடம், இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ., பரிந்துரையின்படி, சேர்ப்பாக்கம் பச்சையம்மன் கோவில் பகுதியில், 63 கிலோவாட் ஆம்பியர் திறன் உடைய புதிய மின்மாற்றி நேற்று அமைக்கப்பட்டது.தெற்கு கோட்டம் மேற்பார்வை பொறியாளர் பிரசாத் மின் மாற்றியை இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இனி சீரான மின்சாரம் வழங்கப்படும் என்பதால், தண்டரை சேர்ப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X