அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் இல்லை: டில்லியில் அண்ணாமலை திட்டவட்டம்

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி : ''தமிழக பா.ஜ.,வுக்குள் எந்தவிதமான உட்கட்சி பூசலும் கிடையாது. அனைத்து நிர்வாகிகளும், அண்ணன், தம்பிகளாக, சகோதர சகோதரிகளாக பழகி வருகிறோம். ஊடகங்கள் கூறுவதில் உண்மை எதுவும் இல்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார். உண்மை இல்லைதமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று டில்லி வந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முக்கிய தலைவர்களை
Annamalai, BJP, Bharatiya Janata Party

புதுடில்லி : ''தமிழக பா.ஜ.,வுக்குள் எந்தவிதமான உட்கட்சி பூசலும் கிடையாது. அனைத்து நிர்வாகிகளும், அண்ணன், தம்பிகளாக, சகோதர சகோதரிகளாக பழகி வருகிறோம். ஊடகங்கள் கூறுவதில் உண்மை எதுவும் இல்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.


உண்மை இல்லை


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று டில்லி வந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முக்கிய தலைவர்களை சந்தித்து, தமிழக நலன்கள் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவே டில்லி வந்துள்ளேன். மற்றபடி கட்சி மேலிடம் எனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், அதற்காக டில்லி வந்துள்ளதாகவும் கூறப்படுவதில் உண்மையில்லை.

கடந்த ஒரு மாதமாக கிஷன் ரெட்டி, முருகன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். என் டில்லி பயணத்தின் நோக்கம் இது தான். ஊடக நண்பர்கள் தான், நான் டில்லி கிளம்பி வந்தாலே, அது இது என்று கதை கட்டுகின்றனர். எங்கள் கட்சியில் அது போன்ற அணுகுமுறை எதுவும் கிடையாது.

உட்கட்சி விவகாரம் தொடர்பாக மேலிடத்திலிருந்து அறிக்கை கேட்கப்பட்டு அளிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. பா.ஜ., மற்ற கட்சிகளை போன்றது அல்ல. ஒரு சித்தாந்த அடிப்படையில், நல்ல சமுதாயம் உருவாக வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கட்சி. தமிழக பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் எதுவும் இல்லை. நாங்கள் அனைவருமே அண்ணன், தம்பிகளாக, சகோதார சகோதரிகளாக பழகி வருகிறோம்.


latest tamil news
ரசிப்பேன்; சிரிப்பேன்


ஒருபுறம் மூத்த தலைவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் தங்கள் அறிவுரைகளால் எங்களை வழி நடத்துகின்றனர். மற்றொரு புறம் எங்களை போன்ற இளைஞர்கள், கட்சிக்குள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துகிறோம். உட்கட்சி பிரச்னை அறவே கிடையாது. உட்கட்சி பிரச்னை என ஊடகங்கள் தான் திரும்ப திரும்ப கூறுகின்றன. எதையாவது எழுத வேண்டுமென்பதற்காகவே இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன. மற்றபடி அதில் உண்மை ஏதும் இல்லை.

கே.டி.ராகவன் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பா.ஜ.,வுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதாக கூறுகின்றனர். அவர் எதற்காக ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை நான் கூற வேண்டியது இல்லை. சீமான் எதைச் சொன்னாலும், அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வேன். ரசிப்பேன்; சிரிப்பேன்; அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
04-செப்-202117:23:41 IST Report Abuse
enkeyem இங்கே இத்தனை இறக்குமதி மதத்தினர் இவ்வளவு பேர் ஐயர், ஐயங்கார் மற்ற தங்களுடைய உண்மை பெயரை விட்டு பொய்யான பெயரில் பி ஜெ பி மீது பயங்கர அக்கறை காட்டி கதறுவது நன்றாகவே தெரிகிறது.
Rate this:
Cancel
04-செப்-202115:01:09 IST Report Abuse
Ramalingam P Nanna sonnel pongo..!
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
04-செப்-202114:14:45 IST Report Abuse
தமிழன் அப்போ எதுக்கு சார் ராகவன மாட்டி விட்டீங்கோ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X