பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : '' முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி 10 ஆண்டுகளை கடந்தும் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,'' என தேனிமாவட்டம் உத்தமபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு

உத்தமபாளையம் : '' முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி 10 ஆண்டுகளை கடந்தும் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,'' என தேனிமாவட்டம் உத்தமபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு துணைத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கச்செயலாளர் கே.ஆர். ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தார். பி.ஆர்.,பாண்டியன், விவசாய சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக பி.ஆர். பாண்டியன் கூறியதாவது : லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சென்றால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு தேனி மாவட்டம் பாலைவனமாகிவிடும். வைகை அணையிலிருந்து குடிநீர் வழக்கம்போல கொண்டு செல்லுங்கள். வைகை அணையில் 30 அடி மண்மேவியுள்ளது.
அதனால் முழுமையாக தண்ணீர் தேக்கமுடியவில்லை. தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது. எனவே அணையை துார்வார வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றுக்கு அருகில் கிணறு தோண்டி மேடான பகுதிகளுக்கு புன்செய் நிலங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல 1975ல் அரசாணை பிறப்பித்துள்ளார். ஆனால் தி.மு.க., அரசு கருணாநிதியின் அரசாணையை ரத்து செய்வதாக கூறுகிறது. எனவே அந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும்.போராட்டம் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி வழங்கியது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து வருகிறது.
நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தவில்லையென்றால் தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். மறுக்கும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தயங்க மாட்டோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X