போலீஸ் செய்திகள்: உடலை தேடும் நீச்சல் வீரர்கள்| Dinamalar

போலீஸ் செய்திகள்: உடலை தேடும் நீச்சல் வீரர்கள்

Added : செப் 04, 2021
Share
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஸ்ரீராம்,25. கோவையில் தனியார் மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த மாதம், 30ம் தேதி, வால்பாறைக்கு சுற்றுலா வந்த போது, சோலையாறு அணை, சேடல்டேம் பகுதியில், நீர்சூழலில் சிக்கி மாயமானார். நான்கு நாட்களாக உடல் கிடைக்காத நிலையில், ஐந்தாம் நாளான நேற்று, கேரள மாநிலம் திருச்சூர் தனியார் மீட்பு பணிக்குழுவை

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஸ்ரீராம்,25. கோவையில் தனியார் மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த மாதம், 30ம் தேதி, வால்பாறைக்கு சுற்றுலா வந்த போது, சோலையாறு அணை, சேடல்டேம் பகுதியில், நீர்சூழலில் சிக்கி மாயமானார். நான்கு நாட்களாக உடல் கிடைக்காத நிலையில், ஐந்தாம் நாளான நேற்று, கேரள மாநிலம் திருச்சூர் தனியார் மீட்பு பணிக்குழுவை சேர்ந்த ஐந்து பேர், நேற்று சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு உடை அணிந்த நீச்சல் வீரர்கள், உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை உடல் கிடைக்காததால், மாணவரின் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

வாகனம் கவிழ்ந்து மூவர் காயம்
கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன், 22, நேற்று காலை பணிக்கு ஆட்களை அழைத்து வருவதற்காக, கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சரக்கு வாகனத்தில் வந்தார்.அப்போது, ஆச்சிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால், சரக்கு வாகனத்தை நிறுத்த முயற்சித்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், சரக்கு வாகன டிரைவர், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பினர். சம்பவம் குறித்து, தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X