பல மணி நேரம் மின் வெட்டு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில், அடிக்கடி பல மணி நேரம் மின் வெட்டு ஏற்படுவதால், மக்கள், தொழில் நிறுவனத்தினர் அவதிப்படுகின்ளனர்.ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், சமத்துார் பேரூராட்சி பகுதிகளில், 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அதேபோல், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, 19 ஊராட்சிகளில், 1.2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வங்கிகள், சிறு, குறு

ஆனைமலை:ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில், அடிக்கடி பல மணி நேரம் மின் வெட்டு ஏற்படுவதால், மக்கள், தொழில் நிறுவனத்தினர் அவதிப்படுகின்ளனர்.ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், சமத்துார் பேரூராட்சி பகுதிகளில், 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அதேபோல், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, 19 ஊராட்சிகளில், 1.2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வங்கிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், ஆனைமலை, கோட்டூர், சமத்துார் சுற்றுப்பகுதிகளில் கடந்த, ஒரு வாரமாக அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. பகல் நேரத்தில், குறைந்தது, 15 முறையாவது மின் வெட்டு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை மின் வெட்டு ஏற்படும் போது, 15 நிமிடங்கள் கடந்து மின் வினியோகம் வழங்கப்படுகிறது. அதேபோல், இரவு நேரங்களில், பல மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது.இதனால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், 'ஆன்லைன்' வகுப்பில் படிக்கும் மாணவர்கள், கொரோனா பாதிப்பால் வீட்டிலிருந்து 'ஆன்லைன்' வாயிலாக பணியாற்றுவோர், மக்கள், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதாக அறிவித்து, மின் தடை அறிவிப்பு வெளியிட்டு மின்வாரியத்தினர் பணிகள் மேற்கொள்கின்றனர். ஆனாலும், தினமும் பலமுறை மின்தடை ஏற்படுவதால், மக்கள் சிரமப்படுகின்றனர். மின் தடை ஏற்படுவதை தடுக்க, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, மக்களின் கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X