விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்க! ஆலோசனை கூட்டத்தில் சப் - கலெக்டர் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்க! ஆலோசனை கூட்டத்தில் சப் - கலெக்டர் அறிவிப்பு

Added : செப் 04, 2021
Share
பொள்ளாச்சி;'விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்,' என, ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி.,கள் தமிழ்மணி, சீனிவாசன், தாசில்தார்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர். சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர்
 விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்க! ஆலோசனை கூட்டத்தில் சப் - கலெக்டர் அறிவிப்பு

பொள்ளாச்சி;'விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்,' என, ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி.,கள் தமிழ்மணி, சீனிவாசன், தாசில்தார்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர். சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகைவேல் முன்னிலை வகித்தார்.சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்து பேசியதாவது:கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மதச்சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், விழா கொண்டாடவும் அனுமதி மறுக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே விழாவை கொண்டாட வேண்டும்.தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும்; அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. தனிநபர்கள், வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.இச்சிலைகளை, முறையாக அகற்றுவதற்கு ஹிந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த அனுமதி, தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.விழாவுக்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறாது முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X