பொது செய்தி

தமிழ்நாடு

துரித உணவுகளை தவிர்க்க அறிவுரை: ஊட்டச்சத்து கண்காட்சியில் விழிப்புணர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் போஷன் அபியான் சார்பில், தேசிய ஊட்டசத்து மாதத்தையொட்டி, குன்னுாரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. குன்னுார் எஸ்.ஐ., தினகரன், பேரணியை துவக்கி வைத்தார்.ஊட்டச்சத்து விழிப்புணர்வை கிராமங்கள் தோறும் கொண்டு செல்லும் உறுதிமொழியை அங்கன்வாடி
 துரித உணவுகளை தவிர்க்க அறிவுரை: ஊட்டச்சத்து கண்காட்சியில் விழிப்புணர்வு

குன்னுார்:குன்னுார் ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் போஷன் அபியான் சார்பில், தேசிய ஊட்டசத்து மாதத்தையொட்டி, குன்னுாரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. குன்னுார் எஸ்.ஐ., தினகரன், பேரணியை துவக்கி வைத்தார்.ஊட்டச்சத்து விழிப்புணர்வை கிராமங்கள் தோறும் கொண்டு செல்லும் உறுதிமொழியை அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்றனர். பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், துரித உணவுகள் தவிர்க்கவும் நடந்த கையெழுத்து இயக்கத்தை வட்டார மருத்துவ அலுவலர் ஹாஜாபேகம் துவக்கி வைத்தார்.ஊட்டச்சத்து உணவுகள் காட்சி படுத்தப்பட்டன. சுகாதார துறை சார்பில் மொபைல் யூனிட் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், சமூக நலத்துறையின் சார்பில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்கள் காட்சி படுத்தப்பட்டன.குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, பெண்கள் நல அலுவலர் பிரியா, போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளர் கண்ணன், திட்ட உதவியாளர் காளீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X