பசுவின் பெருமை: நீதிபதி நெகிழ்ச்சி

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
அலகாபாத்: ''சுவாசிக்கும் போது ஆக்சிஜனை உள்ளிழுத்து அதையே வெளியேற்றும் ஒரே விலங்கு பசு என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர்,'' என, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறினார்.உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் என்பவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கிலேந்திரா சிங் என்பவரின் பசுவை திருடி, அதை இறைச்சிக்காக கொன்றதாக கைது
cow, Allahabad HC, judge

அலகாபாத்: ''சுவாசிக்கும் போது ஆக்சிஜனை உள்ளிழுத்து அதையே வெளியேற்றும் ஒரே விலங்கு பசு என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர்,'' என, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறினார்.


உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் என்பவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கிலேந்திரா சிங் என்பவரின் பசுவை திருடி, அதை இறைச்சிக்காக கொன்றதாக கைது செய்யப்பட்டார்.ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாவேத் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சேகர் குமார் யாதவ், 'பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்' என, சமீபத்தில் உத்தரவிட்டது பரபரப்பை ஏற் படுத்தியது.


latest tamil news



அந்த உத்தரவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: பசு மற்றும் காளைகளை கொல்வது மனிதனை கொல்வதற்கு சமம் என யேசு கிறிஸ்து கூறியுள்ளார். என்னை கொன்றாலும் பரவாயில்லை; பசுவை வதைக்காதீர்கள் என, பண்டிட் மதன் மோகன் மால்வியா தெரிவித்தார். பசு மனிதனின் நண்பன் என புத்தர் கூறினார். சுவாசிக்கும் போது ஆக்சிஜனை உள்ளிழுத்து அதையே வெளியேற்றும் ஒரே விலங்கினம் பசு மட்டுமே என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படும் போது, பசு பாதுகாப்பை அடிப்படை உரிமையாக சேர்க்க வேண்டும் என பல்வேறு உறுப்பினர்களும் கோரினர். க்வாஜா ஹஸன் நிஸாமி, அக்பர், ஹுமாயூன், பாபர் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள் பசு வதையை எதிர்த்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
04-செப்-202118:25:46 IST Report Abuse
arudra1951 எந்த உய்ரினமும் கரியமில வாயு சுவாசித்து உயிர் வாழமுடியாது
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
04-செப்-202118:00:45 IST Report Abuse
Gnanam மஹாத்மா காந்தியை தேசப்பிதாவாக கருதும் இந்திய மக்களாகிய நாம் காருண்யத்தை பற்றி சற்றே சிந்தித்து பிற உயிர்களையும் நம் உயிர் போல் நேசிப்போம். மனித உடம்பிற்கு நல்ல தானிய வகைகளையும், காய் கனிகளையும் தாராளமாக இறைவன் வழங்கிவரும்போது பிற உயிர்களை கொன்று தின்பது கொலைகாரனுக்கு சமம்தான்?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
05-செப்-202112:01:40 IST Report Abuse
 Muruga Velதேசப்பிதா ...தேச மாதா ..தேச மக்கள் .......
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
04-செப்-202117:57:08 IST Report Abuse
Rajas உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத், “பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து மட்டுமின்றி அதனை வெளியேற்றவும் செய்கிறது. ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே. பசு மாட்டிற்கு மஜாஜ் செய்வதால் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து குணமடைய முடியும். பசுக்களுடன் நெருக்கமாக வாழ்வது காசநோயை குணப்படுத்தும் ” எனப் பேசி இருந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X