அந்தரத்தில் தொங்கும் வீடுகளுக்கு அபாயம்: ஏழு குடும்பங்களை காலி செய்ய உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அந்தரத்தில் தொங்கும் வீடுகளுக்கு அபாயம்: ஏழு குடும்பங்களை காலி செய்ய உத்தரவு

Added : செப் 04, 2021
Share
குன்னுார்;குன்னுாரில், கட்டுமான பணிக்காக விதிமுறை மீறி மண் எடுத்த பகுதியில், பாதுகாப்பு கருதி, ஏழு குடும்பங்கள் தற்காலிகமாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சி அலுவலகம் அருகே, கட்டுமான பணிக்காக தனியாரால் மண் தோண்டப்பட்டது. இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இருமுறை மண்சரிவு ஏற்பட்டதுடன், அரசு மருத்துவமனை விரிசல்
 அந்தரத்தில் தொங்கும் வீடுகளுக்கு அபாயம்: ஏழு குடும்பங்களை காலி செய்ய உத்தரவு

குன்னுார்;குன்னுாரில், கட்டுமான பணிக்காக விதிமுறை மீறி மண் எடுத்த பகுதியில், பாதுகாப்பு கருதி, ஏழு குடும்பங்கள் தற்காலிகமாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சி அலுவலகம் அருகே, கட்டுமான பணிக்காக தனியாரால் மண் தோண்டப்பட்டது. இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இருமுறை மண்சரிவு ஏற்பட்டதுடன், அரசு மருத்துவமனை விரிசல் அடைந்தது.மண்சரிவில் இரு தொழிலாளர்கள் காயமடைந்ததால், விதிமீறிய பணி மேற்கொண்ட அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் யோகேஷ் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மணிவண்ணன் ஆய்வு செய்ததில், இப்பகுதி இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது தெரியவந்தது. நேற்று, 2வது நாளாக கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி தலைமையில், தீயணைப்பு துறையினர் உட்பட அனைத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், மண்சரிவுக்கு மேற்பகுதியில் உள்ள, 7 குடும்பங்கள் முன்னெச்சரிக்கையாக தற்காலிகமாக காலி செய்து, மாற்று இடத்தில் வசிக்க உத்தரவிடப்பட்டது. அருகில் உள்ள நான்கு மாடி ஜவுளி கடையும் பூட்டப்பட்டது.தொடர்ந்து, அதிகாரிகள் வழங்கிய அறிவுரைப்படி, தனியார் மூலம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X