பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க.,வின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு.

Added : செப் 04, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : 'மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் தி.மு.க.,வின் நிலைப்பாடு கண்டனத்துக்குரியது' என, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.கொடைக்கானலில் அவர் கூறியதாவது: தி.மு.க., ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு தொடர்ந்து 3 நாட்களுக்கு ஹிந்து மத வழிபாட்டு தலங்களுக்கு தடை

கொடைக்கானல் : 'மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் தி.மு.க.,வின் நிலைப்பாடு கண்டனத்துக்குரியது' என, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

கொடைக்கானலில் அவர் கூறியதாவது: தி.மு.க., ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு தொடர்ந்து 3 நாட்களுக்கு ஹிந்து மத வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மதுக்கடைகளை திறந்து இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும். மாநில பா.ஜ., நிர்வாகிகளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை. அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இது சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளேன்.பொது சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புடன் கூடிய நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை, மத்திய அரசு தனியாருக்கு விற்கிறது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியது கண்டனத்துக்குரியது.காஸ் விலையேற்றத்தை சிறிது காலத்திற்கு பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். காங்., ஆட்சியின் போது ரூ.3 லட்சம் கோடி கடன் வைத்திருந்ததால் அதனை மத்திய அரசு செலுத்தி வருகிறது.

விரைவில் பெட்ரோலிய விலை குறையும்.தமிழகத்தில் மதவாத பிரச்னையை துாண்டும் கட்சிகளின் கை ஓங்கியுள்ளது. இவர்கள் தென் தமிழகத்தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X