பொது செய்தி

தமிழ்நாடு

'பல ஆண்டுகள் கழிந்தாலும் விசாரிக்க வேண்டியது கடமை'

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, வரும் 17க்கு தள்ளி வைக்கப்பட்டது.தற்போதைய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 -- 2015ம் ஆண்டுகளில், அ.தி.மு.க., அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்

சென்னை:மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, வரும் 17க்கு தள்ளி வைக்கப்பட்டது.தற்போதைய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 -- 2015ம் ஆண்டுகளில், அ.தி.மு.க., அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சென்னையில் உள்ள எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதை ரத்து செய்யக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து, உதவி பொறியாளர் தேர்வில் பங்கேற்ற இருவர் சார்பில் முறையிடப்பட்டது. 'பணம் வாங்கி மற்றவர்களுக்கு வேலை வழங்கியதால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பு பறிபோனது' என, அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அமைச்சர் தரப்பு வழக்கறிஞர்கள், 'வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டனர்.இதையடுத்து, 'பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தை நாடினாலும், அவர்களை விசாரிக்க வேண்டியது உயர் நீதிமன்றத்தின் கடமை.'இடையீட்டு மனுதாரர்கள் ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்கை, இதோடு சேர்த்து பட்டியலிட வேண்டும்' என, பதிவுத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X