பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை! உதயநிதி மன்றத்துக்கு அனுமதியா?

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்;'விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்கப்படாத நிலையில், திருப்பூரில், உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடக்கவுள்ள மாரத்தான் நிகழ்ச்சிக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.திருப்பூர் மாவட்ட பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் நரேன் பாபு மற்றும் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்

திருப்பூர்;'விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்கப்படாத நிலையில், திருப்பூரில், உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடக்கவுள்ள மாரத்தான் நிகழ்ச்சிக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.திருப்பூர் மாவட்ட பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் நரேன் பாபு மற்றும் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் அளித்த மனு:தற்போது, தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. திருப்பூரில் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், செப்., 5ல் மாரத்தான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய சூழலில், எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் பெயர்கள், அவர்கள் ஒப்புதலுடன் அழைப்பிதழில் சேர்க்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி மறுக்கும் அரசு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பெயரில் நிகழ்ச்சிக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கியது?இதுதவிர, இதற்கு பொறுப்பாளர்களாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது அப்பட்டமான விதிமீறல். இது குறித்து, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X