சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொல்லை தரும் ஊராட்சி தலைவர்: ஐ.ஜி.,யிடம் பெண் புகார்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை;பாலியல் தொல்லை கொடுக்கும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் பெண் புகார் அளித்தார்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 31 வயது பெண், நேற்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் புகார் அளித்தார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:நான் துாய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் பகுதி ஊராட்சி தலைவர், எனக்கு பாலியல்

கோவை;பாலியல் தொல்லை கொடுக்கும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் பெண் புகார் அளித்தார்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 31 வயது பெண், நேற்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் புகார் அளித்தார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:நான் துாய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் பகுதி ஊராட்சி தலைவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரது மகனும் இதற்கு உடந்தை.புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ஊராட்சி தலைவரை கைது செய்யவில்லை. ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவரும், அவரது மகனும் என்னை அடித்து துன்புறுத்தினர். இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போது போலீசார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, எங்கள் மீதே புகார் பதிவேன் என, இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.மனுவை பெற்றுக் கொண்ட ஐ.ஜி., அலுவலகத்தினர் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X