துப்பாக்கி சுடுதல்; இந்தியாவுக்கு தங்கம்

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டோக்கியோ: டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக்கில் இந்திய வீரர் மனீஷ் நார்வால் தங்கம் வென்றார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் 50 மீட்டர் எஸ்எக்1 பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நார்வால் தங்கம் வென்றார். சிங்கராஜ் அதானா வெள்ளிப்பதக்கம் வென்றார்.இதன் மூலம் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் இந்தியா 34வது
Paralympics, Shooting, India, ManishNarwal, GOLD, Singhraj, SILVER, Cheer4India, Praise4Para

டோக்கியோ: டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக்கில் இந்திய வீரர் மனீஷ் நார்வால் தங்கம் வென்றார்.


latest tamil newsஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் 50 மீட்டர் எஸ்எக்1 பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நார்வால் தங்கம் வென்றார். சிங்கராஜ் அதானா வெள்ளிப்பதக்கம் வென்றார்.


latest tamil news


Advertisement


இதன் மூலம் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் இந்தியா 34வது இடத்தில் உள்ளது.


பிரதமர் பாராட்டு


latest tamil news


தங்கம் வென்ற மனீஷ் நார்வாலை பாராட்டி பிரதமர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: டோக்கியோவில் , இந்தியாவின் பெருமை தொடர்கிறது. இளம் மற்றும் திறமை வாய்ந்த மனீஷ் நார்வால் பெரிய சாதனை படைத்துள்ளார். அவர் தங்கப்பதக்கம் வென்றது, இந்திய விளையாட்டு துறைக்கு சிறப்பான தருணம். அவருக்கு பாராட்டுகள். என தெரிவித்து உள்ளார்.
latest tamil news


சிங்கராஜூக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் கூறியுள்ளதாவது: சிறந்த வீரர் சிங்கராஜ் மீண்டும் சாதனை படைத்துள்ளார். துப்பாக்கி சுடுதலில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளார். அவரது சாதனையை கண்டு இந்தியா மகிழ்ச்சியடைகிறது. அவருக்கு பாராட்டுகள். எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்.
பரிசு


latest tamil news


தங்கம் வென்ற மனீஷ் நார்வாலுக்கு ரூ.6 கோடியும், சிங்கராஜூக்கு ரூ.4 கோடி பரிசு வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்து உள்ளது. மேலும் அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.


மேலும் இரண்டு பதக்கம் உறுதி


ஆண்கள் பேட்மின்டனில், எஸ்.எல்.4., அரையிறுதியில் இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் 21-9, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் இந்தோனேஷிய வீரர் செடியவன் பிரடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.
அதேபோல் ஆண்கள் பேட்மின்டனில், எஸ்எச்6 அரையிறுதியில் கிருஷ்ணா நாகர், பிரிட்டனின் கிறிஸ்டன் கூம்ப்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.


பேட்மின்டனில் தோல்வி


ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் அரையிறுதியில் பிரிட்டன் வீரர் டேனியலிடம், இந்திய வீரர் மனோஜ் சர்கார் 21-8, 21-10 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.
அதேபோல், ஆண்கள் பிரிவு எஸ்எல் 4 பிரிவு அரையிறுதியில் தருண் தில்லான் தோல்வியடைந்தார். வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
04-செப்-202113:29:39 IST Report Abuse
THINAKAREN KARAMANI துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற மனீஷ்க்கும், வெள்ளிப்பதக்கம் வென்ற சிங்கராஜ்க்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
04-செப்-202113:08:01 IST Report Abuse
S.PALANISAMY இப்போ து அரசாங்கம் எல்லா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நேற்று கூட ஒலிம்பிக் விளையாட்டுக்கு தயார் செய்வதற்காக நான்கு பயிற்சி மையங்களை திறப்பது பற்றி சடட சபையில் அறிவித்திருக்கிறார்கள். நீதி மன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்படட ஒருவருக்கு சிலை வைக்கவும் நினைவு இடமும் அமைத்த வர்களை பற்றி எவரும் பேசுவதில்லை ஏன்.?
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
04-செப்-202110:06:29 IST Report Abuse
Palanisamy Sekar பதக்கங்கள் பெரும்பாலும் வடஇந்திய இளைஞர்கள் மூலமே கிடைக்கின்றது. அவர்களது மாநிலங்களில் விளையாட்டு துறைக்கென்று சிறந்த பயிற்சியை கொடுக்கின்றார்கள். இங்கே உள்ள ஆட்சியாளர்கள் சொந்த தகப்பனுக்கு நமது வரிப்பணத்தில் சிலை வைக்கவும் மண்டபம் கட்டவும் அவ்ளோ பணத்தையும் ஏப்பம் விடுகின்றார்கள். பூங்கா அமைக்க நிதி ஒதுக்கும் இந்த அரசு நமது விளையாட்டுத்துறைக்கென்று எதையுமே செய்யவே யோசிப்பதில்லை. வெட்கம் ..
Rate this:
04-செப்-202114:44:24 IST Report Abuse
Vittal anand rao.இவர்கள் "பூந் து விளையாடும்" களமே வேறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X