பொது செய்தி

இந்தியா

இந்திய முஸ்லிம்களை விட்டுவிடுங்கள்: முக்தர் அப்பாஸ்

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛தலிபான் பயங்கரவாதிகளிடம் இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை விட்டுவிடுங்கள்,'' என, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பி.பி.சி. (உருது) சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: காஷ்மீர்
INDIA, MUSLIM, TALIBAN, MUKTHAR APPAS NAKVI, இந்திய முஸ்லிம்கள், விட்டுவிடுங்கள், தலிபான், மத்திய அமைச்சர்

புதுடில்லி: ‛‛தலிபான் பயங்கரவாதிகளிடம் இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை விட்டுவிடுங்கள்,'' என, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பி.பி.சி. (உருது) சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி கூறுகையில், நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் எங்கு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் எழுப்புவோம். காஷ்மீர் முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள், எந்த நாட்டிலும் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.


latest tamil news



அதே நேரம் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்துவது எங்கள் கொள்கை அல்ல. நாங்கள் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்போம். ஏனென்றால் முஸ்லிம்கள் எங்கள் சொந்தங்கள், எங்கள் சொந்த மக்கள். உங்கள் சட்டப்படி அவர்களுக்குச் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலிபான்களின் இந்தப் பேச்சுக்கு பதில் அளித்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று பேட்டியில் :
நான் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை விட்டுவிடுங்கள். இங்கு மசூதிகளில் தொழும் முஸ்லிம்கள் யாரும் துப்பாக்கி தோட்டாக்களாலும், வெடிகுண்டுகளாலும் தாக்கப்படவில்லை.

பெண் குழந்தைகள் பள்ளி செல்வதை யாரும் தடுக்கவில்லை. அவர்களின் தலைகள், கால்கள் வெட்டப்படவில்லை. இந்த அரசு அரசியலைமைப்புச் சட்டத்தை பின்பற்றி நடக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமான உரிமை, முழுமையான வளர்ச்சி, ஒவ்வொருவரின் பங்களிப்புக்கும் உறுதி செய்து அதன்படி செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-202115:47:08 IST Report Abuse
JAGADEESANRAJAMANI மிகவும் அருமையான கருத்து .அப்படியே இந்தியன் தாலிபான் ஆதரவாளர்களையும் ஆப்கானுக்கு விரட்டிவிடுங்கள்.
Rate this:
Cancel
05-செப்-202106:04:06 IST Report Abuse
அப்புசாமி கிலானி அடக்கம் செய்யப்பட்ட போது பக்கிஸ்தான் கொடி போர்த்துனாங்களாம். அவிங்க இந்திய முஸ்லிம்களா? அவிங்களை பக்கி தேசத்திற்கு போகச் சொல்ல வேண்டியதுதானே?
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
05-செப்-202100:14:04 IST Report Abuse
Aarkay என்னதான் படித்திருந்தாலும், அலசி ஆராயும் திறன் இருந்தாலும், உண்மை நிலவரமும், நிஜமும் கண்ணுக்கு புலப்பட்டாலும், மதம் என்ற ஒன்று கண்களை மறைந்துவிடுகிறது. மனிதனுக்கு யானை போல மதம் பிடித்துவிடுகின்றது. மலேஷியா சென்று பாருங்கள். இந்துக்களுக்கு கல்விக்கட்டணம் முதல் எல்லா சலுகைகளும் மறுக்கப்படுகின்றன. நிறைய இந்துக்கள் சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு, சொந்த மதத்தை கைவிட முடியாமல், திருட்டுத்தனமாய் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கோ, மெஜாரிட்டியைவிட எல்லாவற்றிலும் கூடுதல் சலுகை. ஆனாலும் உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்வார்கள். கோவிலை இடித்து தள்ளும் நெடுஞ்சாலைதுறை மசூதியையோ தேவாலாயத்தையோ சாலை விரிவாக்கத்திற்காக இடித்ததுண்டா? சாலையையே மாற்றி அமைப்பார்கள். ஆனாலும், இந்திய அரசை குறை கூறிக்கொண்டும், அண்டைதேச எதிரிகளுடன் கைகுலுக்கிக்கொண்டும் இருப்பார்கள். என்னைக்கேட்டால், இந்தியா மதச்சார்பின்மையை கைவிட்டு, இந்து தேசம் என பறைசாற்றிக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X