பொது செய்தி

தமிழ்நாடு

வாகீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர், வாகீஸ்வரர் கோவில் நிலம் மீட்கப்பட்டது. அந்தியூர் அருகே பட்லூரில், பிரசித்திபெற்ற வாகீஸ்வரர், சென்றாய பெருமாள், கரியகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இவை, 2008 முதல் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கோவில்களுக்கு, 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் தனிப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த

அந்தியூர்: அந்தியூர், வாகீஸ்வரர் கோவில் நிலம் மீட்கப்பட்டது. அந்தியூர் அருகே பட்லூரில், பிரசித்திபெற்ற வாகீஸ்வரர், சென்றாய பெருமாள், கரியகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இவை, 2008 முதல் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கோவில்களுக்கு, 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் தனிப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலங்கள், 2013ல் கோவில் பெயருக்கு திரும்ப பட்டா மாறுதல் செய்யப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை அதிகாரிகளால் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன. நிலங்களில் சாகுபடி செய்தவர்கள் கோவிலுக்கு குத்தகை செலுத்தவில்லை. இதனால் குத்தகை செலுத்தாதோர் மீது, கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில், 2014ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், கரிய காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 12.40 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆறு பேர் மீது, கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு வழக்குகளில் நான்குக்கு, 7.75 ஏக்கர் நிலமும், வாகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 2.48 ஏக்கர் நிலமும், கோவில் நிர்வாகம் கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றி சுவாதீனம் எடுக்கும் பணி நேற்று நடந்தது. ஈரோடு ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் அன்னக்கொடி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் பணி நடந்தது. மீட்கப்பட்ட நிலங்களின் எல்லை பகுதியில், கோவில் நிர்வாகம் சார்பில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X