பொது செய்தி

தமிழ்நாடு

உலக தென்னை தினம் நிகழ்ச்சி: பாரம்பரிய நெல் நடவுக்கு திட்டம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: உலக தென்னை தினத்தை முன்னிட்டு, பவானியில் உள்ள அரசு விதைப்பண்ணையில் நடந்த விழாவில், ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தென்னங்கன்றுகளை நடவு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது: பவானி, குருப்பநாயக்கன்பாளையம் அரசு விதை பண்ணையில் நெல் நாற்று நடவு செய்யும் பணி துவங்கி உள்ளது. இங்கு, 61 ஏக்கரில் இந்தாண்டு நெல் விதை பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்ய

ஈரோடு: உலக தென்னை தினத்தை முன்னிட்டு, பவானியில் உள்ள அரசு விதைப்பண்ணையில் நடந்த விழாவில், ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தென்னங்கன்றுகளை நடவு செய்தார்.


பின்னர் அவர் கூறியதாவது: பவானி, குருப்பநாயக்கன்பாளையம் அரசு விதை பண்ணையில் நெல் நாற்று நடவு செய்யும் பணி துவங்கி உள்ளது. இங்கு, 61 ஏக்கரில் இந்தாண்டு நெல் விதை பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இருந்து பெறப்படும் கரு விதைகளை கொண்டு, இந்த விதை பண்ணையில் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து இம்மாவட்டத்தில் உள்ள, 14 வட்டாரங்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பப்படுகிறது. மேலும், ஏ.டி.டி.38, கோ 52, கோ (ஆர்) 50, சி.ஆர்.1009, ஏ.டி.டி.39, வி.ஜி.டி.1 போன்ற ரகங்கள் நாற்று விடப்பட்டுள்ளது. இந்தாண்டு புதிய முயற்சியாக, தமிழக அரசு அறிவித்தபடி பாரம்பரிய நெல் ரகமான, 60ம் குறுவை, 3 ஏக்கரிலும், தூய மல்லி, 4 ஏக்கரிலும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த பருவத்தில், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். அரசு விதைப்பண்ணை மேலாளர் முருகேசன், வேளாண் அலுவலர் கோகுலவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X