சகதியாக மாறிய காய்கறி மார்க்கெட்| Dinamalar

சகதியாக மாறிய காய்கறி மார்க்கெட்

Added : செப் 04, 2021
Share
ஈரோடு: ஈரோட்டில், பெய்து வரும் தொடர் மழையால் காய்கறி மார்க்கெட் சகதி காடாக மாறியது. கொரோனா பரவலால், ஆர்.கே.வி., சாலையில் இருந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் வ.உ.சி., பூங்கா மைதானத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு கோடி ரூபாய் செலவில் கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தரை தளம் போடவில்லை. இதனால் ஒவ்வெரு மழைக்கும் மார்க்கெட வளாகத்தில் தண்ணீர்

ஈரோடு: ஈரோட்டில், பெய்து வரும் தொடர் மழையால் காய்கறி மார்க்கெட் சகதி காடாக மாறியது. கொரோனா பரவலால், ஆர்.கே.வி., சாலையில் இருந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் வ.உ.சி., பூங்கா மைதானத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு கோடி ரூபாய் செலவில் கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தரை தளம் போடவில்லை. இதனால் ஒவ்வெரு மழைக்கும் மார்க்கெட வளாகத்தில் தண்ணீர் தேங்கி நின்று சகதி காடாக மாறிவிடும். கடந்த இரண்டு நாட்களாக, ஈரோட்டில் பெய்து வரும் மழையால் மார்க்கெட்டில் காய்கறி கொண்டு வரவும், வியாபாரிகள் கடைக்கு எடுத்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்கள் மார்க்கெட்டில் அடி எடுத்து வைக்க முடியவில்லை. இதற்கு நிரந்தர தீர்வாக, மழை நீர் விழுந்தவுடன் வெளியில் செல்லும் வகையில் மார்க்கெட்டை சுற்றிலும் வடிகால் அமைக்க வேண்டும். அல்லது தரைத்தளம் அமைக்க வேண்டும். இதை மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என, வியாபாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X