பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளை சூழ்ந்த சாக்கடை கலந்த மழைநீர்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சேலம்: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில், நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன், லேசான மழை பெய்தது. மதியத்துக்கு பின், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை, பின் விட்டுவிட்டு பெய்தது. இரவில் மீண்டும் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பெத்தநாயக்கன்பாளையத்தில், 126.

சேலம்: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில், நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன், லேசான மழை பெய்தது. மதியத்துக்கு பின், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை, பின் விட்டுவிட்டு பெய்தது. இரவில் மீண்டும் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பெத்தநாயக்கன்பாளையத்தில், 126. மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சேலம், 92, ஏற்காடு, 78, கரியகோவில், 70, காடையாம்பட்டி, 67, ஓமலூர், 59, ஆணைமடுவு, 54, ஆத்தூர், 50.2, தம்மம்பட்டி, 37, மேட்டூர், 33.2, வாழப்பாடி, 20, வீரகனூர், 18, இடைப்பாடி, 16, சங்ககிரியிரில், 1.5 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த தொடர் மழையால், குளிர் காற்று வீசியது. தாழ்வான இடங்களை, வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சேலம் அம்மாபேட்டை, நாராயண நகர், சித்தேஸ்வரா நகர், களரம்பட்டி, கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, அசோக் நகர், உள்ளிட்ட பல பகுதிகளில், வீடுகளில் மழைநீர் புகுந்தது. மக்கள் இரவு முழுதும் தூங்காமல் தவித்தனர். சாலைகளில், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி, ஆங்காங்கே தேங்கி நின்றது. மாநகராட்சி பல இடங்களில், பாதாள சாக்கடைக்கு வெட்டப்பட்ட பள்ளம், மூடாமல் இருப்பதால், தண்ணீர் தேங்கியது. இதே நிலை மாவட்டம் முழுதும் நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X