பொது செய்தி

தமிழ்நாடு

கேள்விக்குறியாகும் சமூக இடைவெளி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

Added : செப் 04, 2021
Share
Advertisement
சேலம்: பெண்களுக்கு இலவசம் என்பதால், அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து, சமூக இடைவெளியின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.செப்., 1 முதல், பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையும், கல்லூரி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாணவ, மாணவியர் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி தொடங்கும் நேரம், நிறைவடையும்

சேலம்: பெண்களுக்கு இலவசம் என்பதால், அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து, சமூக இடைவெளியின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.


செப்., 1 முதல், பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையும், கல்லூரி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாணவ, மாணவியர் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி தொடங்கும் நேரம், நிறைவடையும் நேரத்தில், பஸ்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. சமூக இடைவெளி இல்லாமல், ஒருவருக்கொருவர் நெருக்கியபடி பயணிக்கின்றனர். இதனால், மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பயணியரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால், கடந்த காலத்தை விட, பஸ்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படவில்லை. அதேநேரம் பல பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் நாங்கள், பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகிறோம். இந்நிலையில் கொரோனா தடுப்பு, சமூக இடைவெளி ஆகியவை குறித்தெல்லாம் யோசிக்க கூட வாய்ப்பில்லை. வகுப்பறைகளில், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தும் தமிழக அரசு கூடுதல் எண்ணிக்கையில் பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X