சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் சந்தேகப்பட்டவர் மருத்துவமனையில் கவலைக்கிடம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில், பணம், நகை கொள்ளையடித்து தீ வைத்ததாக சந்தேகப்பட்டவர், தீக்காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைவாசலை சேர்ந்த, அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற அலுவலர் சுப்ரமணி, 63. இவரது மனைவி ராஜலட்சுமி, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, புனல்வாசலில் உள்ள அவரது வீட்டில்

கெங்கவல்லி: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில், பணம், நகை கொள்ளையடித்து தீ வைத்ததாக சந்தேகப்பட்டவர், தீக்காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைவாசலை சேர்ந்த, அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற அலுவலர் சுப்ரமணி, 63. இவரது மனைவி ராஜலட்சுமி, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, புனல்வாசலில் உள்ள அவரது வீட்டில் புகுந்த மர்ம கும்பல், பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு, 'காஸ்' சிலிண்டரை திறந்து, வீட்டுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். சுப்ரமணியின் நிலத்தையொட்டி உள்ள சிவக்குமார், 50, மீது, சந்தேகம் உள்ளதாக, சுப்ரமணி புகார்படி, ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில், சிவக்குமார், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது, நேற்று போலீசாருக்கு தெரிந்தது. தீக்காயம் அடைந்தவர், தொடர்புடைய நபர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என, போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கூறுகையில், ''சுயநினைவு இல்லாமல், ஆபத்தான நிலையில் சிவக்குமார் உள்ளதால், குணமடைந்த பின் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X