பொது செய்தி

தமிழ்நாடு

மகன், பேரனிடம் ஜீவனாம்சம் கேட்டு கலெக்டர் ஆபீசில் முதியோர் மனு

Added : செப் 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: அரூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியில் வசிப்பவர் சென்னு கவுண்டர், 78. இவரது மனைவி கந்தச்சியம்மாள், 70; இவர்கள் தங்களை கண்டுகொள்ளாத, மகன் மற்றும் பேரனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: எங்களுக்கு, சென்னகேசவன், செந்தில்குமார் என இரு மகன்கள். இவர்களுக்கு, பத்தாண்டுகளுக்கு முன், 22 ஏக்கர்

தர்மபுரி: அரூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியில் வசிப்பவர் சென்னு கவுண்டர், 78. இவரது மனைவி கந்தச்சியம்மாள், 70; இவர்கள் தங்களை கண்டுகொள்ளாத, மகன் மற்றும் பேரனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: எங்களுக்கு, சென்னகேசவன், செந்தில்குமார் என இரு மகன்கள். இவர்களுக்கு, பத்தாண்டுகளுக்கு முன், 22 ஏக்கர் விவசாய நிலத்தை பகிர்ந்து அளித்தோம். மூத்த மகன் சென்னகேசவன், மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தற்போது, சென்னகேசவனின் மகன் செந்தமிழ் மற்றும் இளைய மகன் செந்தில்குமார் ஆகியோர் அந்நிலத்தில் விவசாயம் செய்கின்றனர். இருவரும் எங்களுக்கு உணவும் வழங்குவதில்லை. வயதான காலத்தில் வேலைக்கும் செல்ல முடியவில்லை. நாங்கள் வைத்திருந்த, 19 பவுன் நகையையும், இளைய மகன் செந்தில்குமார் வாங்கிக் கொண்டார். எனவே, அவர்களிடமிருந்து எங்களது நகையை மீட்டு, ஜீவனாம்சம் வாங்கித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X