பொது செய்தி

தமிழ்நாடு

புத்தக கண்காட்சி

Added : செப் 04, 2021
Share
Advertisement
பென்னாகரம்: தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் மற்றும் ப்யூசன் கிளப் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி பென்னாகரத்தில் நேற்று தொடங்கியது. வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்கள் பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள சமுதாய கூடத்தில் நடக்கிறது. துவக்க நிகழ்ச்சிக்கு தகடூர் புத்தக பேரவை வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை வகித்தார். தர்மபுரி முன்னாள்

பென்னாகரம்: தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் மற்றும் ப்யூசன் கிளப் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி பென்னாகரத்தில் நேற்று தொடங்கியது. வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்கள் பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள சமுதாய கூடத்தில் நடக்கிறது. துவக்க நிகழ்ச்சிக்கு தகடூர் புத்தக பேரவை வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை வகித்தார். தர்மபுரி முன்னாள் எம்.பி.,யும், தகடூர் புத்தக பேரவை செயலாளருமான செந்தில், புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். முதல் புத்தகத்தை பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி முதல் விற்பனையை துவக்கி வைக்க, தொழிலதிபர் கார்த்திக் பெற்றுக்கொண்டார். கண்காட்சியில் தினசரி மாலையில் இலக்கிய கலந்துரையாடல் மற்றும் நூல் அறிமுக நிகழ்ச்சிகள் நடக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X