பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் மறியல்

Added : செப் 04, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோட்டில், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், பாலக்கோட்டிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி ஊரக

பாலக்கோடு: பாலக்கோட்டில், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், பாலக்கோட்டிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், முழு வேலைவாய்ப்பு, முழு சம்பளம் மற்றும் நான்கு மணி நேரம் மட்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில பொருளாளர் செட்டியப்பன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்களை, அதிகாரிகள் அழைத்து பேசவில்லை என, திடீரென மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் செய்தனர். டி.எஸ்.பி., தினகரன், தாசில்தார் அசோக்குமார் மற்றும் பி.டி.ஓ., ரவிச்சந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபின், மாற்றுத்திறனாளிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X