கோவில் இடம் ஆக்கிரமிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் இடம் ஆக்கிரமிப்பு

Added : செப் 04, 2021
Share
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் பஞ்., முதலாவது வார்டில், தர்மபுரி மெயின்சாலையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான காலி இடங்கள் உள்ளன. இதை, தள்ளுவண்டி கடைகள், வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். சிலர், பெரிய இடங்களை ஆக்கிரமித்து, கடைகள் வாடகை விடும் அளவில் கடைகள் அமைத்துள்ளனர். இதை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இக்கோவில் இடங்களில் வைத்திருக்கும் பல

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் பஞ்., முதலாவது வார்டில், தர்மபுரி மெயின்சாலையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான காலி இடங்கள் உள்ளன. இதை, தள்ளுவண்டி கடைகள், வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். சிலர், பெரிய இடங்களை ஆக்கிரமித்து, கடைகள் வாடகை விடும் அளவில் கடைகள் அமைத்துள்ளனர். இதை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இக்கோவில் இடங்களில் வைத்திருக்கும் பல கடைகளுக்கு நாள்தோறும், 50, 100 ரூபாய் வரை டவுன் பஞ்., மூலம் கேட் வாடகை வசூல் செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு கோவில் இடங்கள் மீட்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X