ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
அரூர்: அரூர், அம்பேத்கர் நகரில், 15 ஏக்கரில் உள்ள நர்சனேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: நர்சனேரியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், மழைக்காலங்களில் ஏரியில் போதுமான தண்ணீர் நிரம்புவதில்லை. மேலும், லிங்காபுரம் ஏரியிலிருந்து, நர்சனேரிக்கு தண்ணீர் கொண்டு வரும், 1 கி.மீ., தூரமுள்ள வாய்க்காலின், சில

அரூர்: அரூர், அம்பேத்கர் நகரில், 15 ஏக்கரில் உள்ள நர்சனேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: நர்சனேரியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், மழைக்காலங்களில் ஏரியில் போதுமான தண்ணீர் நிரம்புவதில்லை. மேலும், லிங்காபுரம் ஏரியிலிருந்து, நர்சனேரிக்கு தண்ணீர் கொண்டு வரும், 1 கி.மீ., தூரமுள்ள வாய்க்காலின், சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், லிங்காபுரம் ஏரியில் தண்ணீர் நிரம்பினாலும், நர்சனேரிக்கு கடந்த, மூன்று ஆண்டுகளாக, உபரிநீர் செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, நர்சனேரி மற்றும் நீர் வழிப்பாதையான, வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X