மொபைல்போன் பறித்த 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் பறித்த 3 பேர் கைது

Added : செப் 04, 2021
Share
ஓசூர்: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை கிச்சப்பா தெருவை சேர்ந்தவர் முகமது ஜாகீர், 33. தனியார் நிறுவன எலக்ட்ரீஷியன்; கடந்த, 1ல் இரவு, சக ஊழியர்களான கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூரை சேர்ந்த கார்த்திக், 29, சூளகிரி அடுத்த காலிங்காவரத்தை சேர்ந்த சந்திரசேகர், 24, ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, ஹோண்டா ஆக்டிவா பைக்கில் சென்றார். குமுதேப்பள்ளி தேசிய

ஓசூர்: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை கிச்சப்பா தெருவை சேர்ந்தவர் முகமது ஜாகீர், 33. தனியார் நிறுவன எலக்ட்ரீஷியன்; கடந்த, 1ல் இரவு, சக ஊழியர்களான கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூரை சேர்ந்த கார்த்திக், 29, சூளகிரி அடுத்த காலிங்காவரத்தை சேர்ந்த சந்திரசேகர், 24, ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, ஹோண்டா ஆக்டிவா பைக்கில் சென்றார். குமுதேப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேம்பாலத்தில், நான்கு பேர் கும்பல், உதவி கேட்பது போல் நடித்து பைக்கை நிறுத்தினர். அப்போது, நான்கு பேரும் முகமது ஜாகீர் உள்ளிட்டோரை தாக்கி விட்டு, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று மொபைல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதில் காயமடைந்த முகமது ஜாகீர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், புக்கசாகரத்தை சேர்ந்த பால்ராஜ், 23, விவேகானந்தன், 22, முரளி, 21, மாதேஷ், 23, ஆகியோர், வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரை கைது செய்த போலீசார், மா?தேஷை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X