பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மைதானத்திலுள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த காய்கறிக் கடைகள், புதிய மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் இயங்கியது. கொரோனா பரவல் குறைய துவங்கியதால், புதிய மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்டில் இயங்கிய காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், அரசு பள்ளி விளையாட்டு மைதானத்திலுள்ள

கிருஷ்ணகிரி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த காய்கறிக் கடைகள், புதிய மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் இயங்கியது. கொரோனா பரவல் குறைய துவங்கியதால், புதிய மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்டில் இயங்கிய காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், அரசு பள்ளி விளையாட்டு மைதானத்திலுள்ள காய்கறி கடைகளை அகற்றவில்லை. தற்போது கடந்த, 1ல் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள கடைகளை அகற்ற, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அக்கடைகள் அகற்றப்படவில்லை. தற்போது பெய்துள்ள மழையால், விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இங்குள்ள காய்கறி கடைகளை உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X