பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: எலுமிச்சங்கிரி ஐ.சி.ஏ.ஆர்., வேளாண் அறிவியல் மையம் சார்பில், ஜல்சக்தி அபியான் நிகழ்ச்சி, பர்கூர், ஐகுந்தம் கொத்தப்பள்ளியில் நடந்தது. வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ், மைய நோக்கம், செயல்பாடுகளை விளக்கினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன், ஜல்சக்தி அபியான் திட்ட முக்கியத்துவம், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் முறைகள்

கிருஷ்ணகிரி: எலுமிச்சங்கிரி ஐ.சி.ஏ.ஆர்., வேளாண் அறிவியல் மையம் சார்பில், ஜல்சக்தி அபியான் நிகழ்ச்சி, பர்கூர், ஐகுந்தம் கொத்தப்பள்ளியில் நடந்தது. வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ், மைய நோக்கம், செயல்பாடுகளை விளக்கினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன், ஜல்சக்தி அபியான் திட்ட முக்கியத்துவம், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்து பேசினார். பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பரசுராமன், சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்களை விளக்கினார். மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன், விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்துமாறும், விதை நேர்த்தி தொழில் நுட்பங்களை பின்பற்ற அறிவுறுத்தினார். வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுரேஷ்குமார், சொட்டுநீர் பாசன திட்டத்தை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்து மகசூல் பெற முடியும் என்றார். பர்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சக்திவேல், வேளாண் துறை திட்டங்களை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X