கெலவரப்பள்ளி, சின்னாறு அணை மீன்பிடி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி, சின்னாறு அணை மீன்பிடி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்

Added : செப் 04, 2021
Share
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர், கெலவரப்பள்ளி அணை மற்றும் சூளகிரி சின்னாறு அணை ஆகியவற்றில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின்பிடி குத்தகை எடுக்க ஏலம் நடக்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும், 13ல் பகல், 12:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மீன்பிடி குத்தகை விண்ணப்பங்கள் மற்றும் அதன் விபரங்களை, www.tenders.tn.gov.in, www.fisheries.tn.gov.in என்ற இணையதள

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர், கெலவரப்பள்ளி அணை மற்றும் சூளகிரி சின்னாறு அணை ஆகியவற்றில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின்பிடி குத்தகை எடுக்க ஏலம் நடக்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும், 13ல் பகல், 12:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மீன்பிடி குத்தகை விண்ணப்பங்கள் மற்றும் அதன் விபரங்களை, www.tenders.tn.gov.in, www.fisheries.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி கோஆப்ரெட்டிவ் காலனி, 4வது குறுக்கு தெருவிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04343 235745 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு நீர்த்தேக்கத்திற்கும் தனித்தனியே ஒப்பந்த புள்ளி மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர், எண், 571, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு வரும், 13ல் பகல், 12:00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X