உலக சாதனை புத்தகத்தில் இடம்: மாணவர்களுக்கு சி.இ.ஓ., பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக சாதனை புத்தகத்தில் இடம்: மாணவர்களுக்கு சி.இ.ஓ., பாராட்டு

Added : செப் 04, 2021
Share
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் சிவமணி, தமிழ்நாட்டின், 385 ஒன்றியங்ளை, 3.17 நிமிடங்களில் ஒப்புவித்தார். இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கீர்த்தனா 1,330 திருக்குறளை ஐஸ் குச்சியில் எழுதியுள்ளார். இதை, பள்ளி ஆசிரியர்கள் வீடியோ எடுத்து சென்னையிலுள்ள 'யூனிவர்ஷல்', 'பியூச்சர்

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் சிவமணி, தமிழ்நாட்டின், 385 ஒன்றியங்ளை, 3.17 நிமிடங்களில் ஒப்புவித்தார். இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கீர்த்தனா 1,330 திருக்குறளை ஐஸ் குச்சியில் எழுதியுள்ளார். இதை, பள்ளி ஆசிரியர்கள் வீடியோ எடுத்து சென்னையிலுள்ள 'யூனிவர்ஷல்', 'பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்டு'க்கு அனுப்பினர். இச்சாதனையை அங்கீகரித்து, உலக சாதனை அமைப்பு சான்றிதழ் வழங்கியது. மாணவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X