சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாசில்தாரை தாக்கிய தி.மு.க., நிர்வாகி

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருச்சி: மணப்பாறை நிலவரி பிரிவு தாசில்தாரை, தி.மு.க., நகர பொருளாளர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து, மாவட்டம் முழுதும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் பாத்திமா சகாயராஜ், 52. மணப்பாறையில், நிலவரி பிரிவு தாசில்தாராக பணிபுரிகிறார். மணப்பாறை ஜீவா தெருவைச் சேர்ந்தவர்

திருச்சி: மணப்பாறை நிலவரி பிரிவு தாசில்தாரை, தி.மு.க., நகர பொருளாளர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து, மாவட்டம் முழுதும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் பாத்திமா சகாயராஜ், 52. மணப்பாறையில், நிலவரி பிரிவு தாசில்தாராக பணிபுரிகிறார். மணப்பாறை ஜீவா தெருவைச் சேர்ந்தவர் கோபி, 51. நகர தி.மு.க., பொருளாளர். தன் நிலம் தொடர்பான சர்வே எண்களையும், அதற்கு பக்கத்து இடங்களின் சர்வே எண்ணையும் கேட்டுள்ளார். கோபி கேட்டபடி, பக்கத்து நிலங்களின் சர்வே எண்களை கொடுக்க, தாசில்தார் சகாயராஜ் மறுத்து விட்டார். நேற்று காலை, தாசில்தார் அலுவலகத்தில் இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கோபி, தாசில்தார் மேஜை மீது இருந்த பெயர் பலகையை எடுத்து சகாயராஜை தாக்கி உள்ளார். பதிலுக்கு அவரும், அருகில் இருந்த கட்டையை எடுத்து அடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர். தாசில்தார், மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். போலீசார், கோபி மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்ததாகக் கூறி, கோபி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம் பரவியதால், மணப்பாறை உட்பட திருச்சி மாவட்டம் முழுதும் உள்ள தாசில்தார் அலுவலகங்களில், வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X