பொது செய்தி

தமிழ்நாடு

கடந்த மார்ச்சில் மஞ்சள் விலை உயர்வால் சாகுபடி பரப்பு அதிகரிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கடந்த மார்ச்சில் மஞ்சள் விலை உயர்வால், நடப்பு பருவத்தில், 10 சதவீதம் வரை மஞ்சள் சாகுபடியை கூடுதல் செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில், 6,000 ஏக்கர் வரை ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்த நிலையில் நடப்பாண்டு, 6,900 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ளனர்.இதுபற்றி, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கடந்த மார்ச்சில் மஞ்சள் விலை உயர்வால், நடப்பு பருவத்தில், 10 சதவீதம் வரை மஞ்சள் சாகுபடியை கூடுதல் செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில், 6,000 ஏக்கர் வரை ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்த நிலையில் நடப்பாண்டு, 6,900 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ளனர்.


இதுபற்றி, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமாக மஞ்சள் சாகுபடி செய்வதாலும், அங்கு விலை குறைவாக உள்ளதாலும், பல வியாபாரிகள் அங்கு மஞ்சளை வாங்குகின்றனர். பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களில் புதிதாக மஞ்சள் சாகுபடி செய்து, அம்மாநில மஞ்சள் தேவையை பூர்த்தி செய்வதால், இங்கிருந்து வாங்குவதில்லை. இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்ததால், ஈரோடு பகுதியில் இருந்து ஆண்டுக்கு, மூன்று லட்சம் முதல், ஐந்து லட்சம் மூட்டை மஞ்சள் விற்பனை பாதித்துள்ளது. இருப்பினும், கொரோனாவால் மஞ்சளை மருத்துவ குணத்துக்காக பயன்படுத்துவது அதிகரித்ததால் கடந்த பிப்., இறுதியில் உயரத்துவங்கி, மார்ச்சில் குவிண்டால், 10 ஆயிரம் ரூபாயை கடந்தது. மார்ச், 11ல், 10 ஆயிரத்து, 229 ரூபாய்க்கு விற்பனையானது. அம்மாத இறுதிக்குள் மீண்டும், 8,000 ரூபாய்க்கு குறைந்தது. இருப்பினும் வரும் ஆண்டு விலை உயரும் என்ற நம்பிக்கையால் கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளில் கூடுதலாக மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X