சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்கம்பங்களை சாய்த்த யானைகள்; கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மின்கம்பங்களை யானைகள் கூட்டம் சாய்த்ததால், கிராமங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலிருந்து வெளியேறிய யானைகள், நேற்று முன்தினம் இரவு, டபுள்கான்தொட்டி கிராமம் வழியாக சென்றன. அப்போது, தேன்கனிக்கோட்டை - அய்யூர் சாலையிலுள்ள ஒரு மரத்தை வேரோடு சாய்த்தன. இதனால் அவ்வழியாக வாகன

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மின்கம்பங்களை யானைகள் கூட்டம் சாய்த்ததால், கிராமங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலிருந்து வெளியேறிய யானைகள், நேற்று முன்தினம் இரவு, டபுள்கான்தொட்டி கிராமம் வழியாக சென்றன. அப்போது, தேன்கனிக்கோட்டை - அய்யூர் சாலையிலுள்ள ஒரு மரத்தை வேரோடு சாய்த்தன. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து தடைப்பட்டது. மேலும், அங்கிருந்த இரு மின்கம்பங்களை யானைகள் சாய்த்தன. அதிர்ஷ்டவசமாக யானைகளை மின்சாரம் தாக்கவில்லை. தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்துக்கு செல்லும் மின்கம்பங்கள் சாய்ந்ததால், 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் நள்ளிரவில் மின்தடையால் மக்கள் சிரமப்பட்டனர். தேன்கனிக்கோட்டை மின்வாரியத்தினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சேதமான மின்கம்பத்தால், 2.50 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின், கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X