ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மின்கம்பங்களை யானைகள் கூட்டம் சாய்த்ததால், கிராமங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலிருந்து வெளியேறிய யானைகள், நேற்று முன்தினம் இரவு, டபுள்கான்தொட்டி கிராமம் வழியாக சென்றன. அப்போது, தேன்கனிக்கோட்டை - அய்யூர் சாலையிலுள்ள ஒரு மரத்தை வேரோடு சாய்த்தன. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து தடைப்பட்டது. மேலும், அங்கிருந்த இரு மின்கம்பங்களை யானைகள் சாய்த்தன. அதிர்ஷ்டவசமாக யானைகளை மின்சாரம் தாக்கவில்லை. தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்துக்கு செல்லும் மின்கம்பங்கள் சாய்ந்ததால், 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் நள்ளிரவில் மின்தடையால் மக்கள் சிரமப்பட்டனர். தேன்கனிக்கோட்டை மின்வாரியத்தினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சேதமான மின்கம்பத்தால், 2.50 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின், கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE