சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியருக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி ஆசிரியர் மீது புகார்

Added : செப் 04, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: அரசு பள்ளி மாணவியருக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் பள்ளியில் பாடங்களை கவனித்த பிளஸ் 1 மாணவியர் இருவர், தங்கள் பெற்றோரிடம், 'பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர் ஆபாச படங்களை காட்டி

நாமகிரிப்பேட்டை: அரசு பள்ளி மாணவியருக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் பள்ளியில் பாடங்களை கவனித்த பிளஸ் 1 மாணவியர் இருவர், தங்கள் பெற்றோரிடம், 'பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர் ஆபாச படங்களை காட்டி விளக்கியதாகவும் தொடர்ந்து, சில்மிஷத்தில் ஈடுபட்டார்' எனவும் கூறியுள்ளனர். இது அனைத்து மாணவியருக்கும் தெரியும். வெளியில் சொன்னால் ஆசிரியர் அடித்துவிடுவார். இல்லையென்றால் பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவார் என்ற அச்சத்தில் யாரும் வெளியில் சொல்ல பயப்படுவதாகவும் மாணவியர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவியரின் பெற்றோர், தலைமை ஆசிரியர் ஜெகநாதனிடம் புகார் அளித்தனர். அதன்படி, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, சமூகநலத்துறை தாசில்தார் தமிழ்மணி, டி.எஸ்.பி., செந்தில்குமார், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரிடம் தனித்தனியாக விசாரணையை தொடங்கினர். நேற்று மதியம் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெகநாதனிடம் கேட்டபோது, ''நேற்று (நேற்று முன்தினம்)வந்த மாணவ, மாணவியருக்கு இன்று (நேற்று) விடுமுறை. அதனால் நாளை (இன்று) பள்ளிக்கு வரும் அவர்களிடம் விசாரணை செய்த பிறகே உண்மை நிலை தெரியவரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X