பொது செய்தி

தமிழ்நாடு

கோழி தீவன மூலப்பொருள் சோயா: நாமக்கல் பண்ணையாளர்கள் சாகுபடி

Added : செப் 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழகத்தில் முதன் முறையாக, முட்டை கோழிப்பண்ணையாளர்கள் விற்பனை சங்கத்தினர் சோயா சாகுபடி செய்துள்ளனர்.நாமக்கல் மண்டலத்தில், 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. தினமும் நான்கு கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள், வட மாநிலங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில், தீவன மூலப்பொருளான சோயா உற்பத்தி

நாமக்கல்: தமிழகத்தில் முதன் முறையாக, முட்டை கோழிப்பண்ணையாளர்கள் விற்பனை சங்கத்தினர் சோயா சாகுபடி செய்துள்ளனர்.


நாமக்கல் மண்டலத்தில், 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. தினமும் நான்கு கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள், வட மாநிலங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில், தீவன மூலப்பொருளான சோயா உற்பத்தி செய்யும் பணியில், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டியினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, சங்க தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: சோயா தேவை அதிகளவில் உள்ளது. அவற்றை, 40 ஆண்டுகளாக கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். இந்தாண்டு தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு, 8,000 டன் தேவைப்படுகிறது. கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது, 100 முதல், 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதனால், கோழிப்பண்ணையாளர்கள் சேர்ந்து சோயா பயிர் செய்ய முடிவு செய்தோம். முன் மாதிரியாகவும், முதல் முயற்சியாகவும், 10 ஏக்கரில் சோயா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 110 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். வேளாண் துறை சார்பில், சோயா விதைகளை வாங்கி மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவற்றை, வாழை, மரவள்ளி, கடலை, கரும்பு போன்ற பயிர்களில், ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். சாகுபடி செய்துள்ள சோயாவை வாங்குவதற்கு, மதுரையில் ஒன்று, பல்லடத்தில் இரண்டு, எங்கள் சங்கம் சார்பில் ஒன்று என, நான்கு பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. சோயா விதைகளை வாங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X