பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவியர் இருவருக்கு கொரோனா

Added : செப் 04, 2021
Share
Advertisement
ப.வேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவியர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 450க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 1 முதல், 9, 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியர் இருவருக்கு கொரோனா

ப.வேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவியர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 450க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 1 முதல், 9, 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியர் இருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவல் பள்ளி நேரம் முடிந்த பின்னர் தெரிய வந்ததால் பள்ளி இன்று திறக்கப்படுமா, கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு சென்ற மாணவியர், ஆசிரியைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X