பொது செய்தி

தமிழ்நாடு

1,000 ஏக்கரில் மிளகாய் சாகுபடி: விலை வீழ்ச்சியால் ஏமாற்றம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கொளத்தூர்: கொளத்தூர் வட்டாரத்தில், 1,000 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்துள்ள நிலையில், அறுவடை சமயத்தில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.சேலம் மாவட்டம், கொளத்தூரில் தின்னப்பட்டி, பண்ணவாடி, கருங்கல்லூர், லக்கம்பட்டி ஊராட்சிகளில், நடப்பாண்டில் விவசாயிகள், 1,000 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஜூனில் சாகுபடி தொடங்கி, தற்போது அறுவடை நடக்கிறது. தினமும், 125 முதல், 150 டன்

கொளத்தூர்: கொளத்தூர் வட்டாரத்தில், 1,000 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்துள்ள நிலையில், அறுவடை சமயத்தில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.


சேலம் மாவட்டம், கொளத்தூரில் தின்னப்பட்டி, பண்ணவாடி, கருங்கல்லூர், லக்கம்பட்டி ஊராட்சிகளில், நடப்பாண்டில் விவசாயிகள், 1,000 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஜூனில் சாகுபடி தொடங்கி, தற்போது அறுவடை நடக்கிறது. தினமும், 125 முதல், 150 டன் மிளகாய் அறுவடை செய்து, பிற மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து, புதுவேலமங்கலம் விவசாயி கண்ணப்பன் கூறியதாவது: கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஒரு கிலோ மிளகாயை வியாபாரிகள், 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. கடந்த மாதம் கிலோ, 25 ரூபாய்க்கு கொள்முதல் செய்த நிலையில் விளைச்சல் அதிகரிப்பால் தற்போது, 13 முதல், 14 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். சாகுபடி, அறுவடை செலவு அதிகரித்த நிலையில் மிளகாய் கொள்முதல் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X