பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடிக்கு பட்டு சேலை தேக்கம்; உற்பத்தியை தொடங்குவதில் சிக்கல்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், நாமக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 300 கோடி ரூபாய்க்கு பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளதால், தறிக்கூடங்களில் உற்பத்தியை முழுமையாக தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் பலராமன் கூறியதாவது: சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, புத்தூர்,

சேலம்: சேலம், நாமக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 300 கோடி ரூபாய்க்கு பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளதால், தறிக்கூடங்களில் உற்பத்தியை முழுமையாக தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் பலராமன் கூறியதாவது: சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, புத்தூர், பஞ்சுகாளிப்பட்டி, மேச்சேரி, ஓமலூர், சிந்தாமணியூர் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், தர்மபுரியில் ஊத்தங்கரை, அரூர், காஞ்சிபுரம் மாவட்டம் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் கைத்தறி பட்டு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா முதல் அலையில் ஊரடங்கால், சேலம் உள்பட தமிழகம் முழுதும், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கைத்தறி பட்டு சேலைகள் தேக்கம் அடைந்தன. இரண்டாம் அலை ஊரடங்கில் விற்பனை முற்றிலும் இல்லை. பட்டு சேலைகள் தேக்கத்தால், சேலம் உள்பட தமிழகம் முழுதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டு தறிக்கூடங்கள் மூடப்பட்டு, 1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தற்போது சகஜ நிலை திரும்பும் நிலையில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகள் தேக்கமடைந்து, உடனே உற்பத்தியை தொடங்க முடியாத நிலை உள்ளது. 15 சதவீத தறிக்கூடங்கள் மட்டும் இயங்க தொடங்கியுள்ளன. தறிக்கூடங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை, வேலை இழந்த நெசவு தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தொழில் பழைய நிலைக்கு திரும்ப, கைத்தறி பட்டுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X