சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.21 லட்சம் கேட்டு கடத்திய வியாபாரி மீட்பு: சென்னை, ஈரோட்டை சேர்ந்த 4 பேருக்கு காப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
நங்கவள்ளி: வெங்காய வியாபாரியை கடத்தி, 21 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை, போலீசார் கைது செய்தனர். அத்துடன் வியாபாரியையும் மீட்டனர்.சேலம் மாவட்டம், ஓமலூர், எலவம்பட்டி கிராமம், நத்தக்காட்டானூரை சேர்ந்தவர் செல்வராஜ், 38. வெங்காய வியாபாரி. இவரது மனைவி சரண்யா, 25. சென்னை மேற்கு மாம்பழம் பகுதியை சேர்ந்த வெங்காய வியாபாரி விக்னேஷ், 30. இவரிடம், செல்வராஜ் மொத்தமாக வெங்காயம்

நங்கவள்ளி: வெங்காய வியாபாரியை கடத்தி, 21 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை, போலீசார் கைது செய்தனர். அத்துடன் வியாபாரியையும் மீட்டனர்.


சேலம் மாவட்டம், ஓமலூர், எலவம்பட்டி கிராமம், நத்தக்காட்டானூரை சேர்ந்தவர் செல்வராஜ், 38. வெங்காய வியாபாரி. இவரது மனைவி சரண்யா, 25. சென்னை மேற்கு மாம்பழம் பகுதியை சேர்ந்த வெங்காய வியாபாரி விக்னேஷ், 30. இவரிடம், செல்வராஜ் மொத்தமாக வெங்காயம் வாங்கி விற்கிறார். கடந்த, 1ல், பாப்பம்பாடி செல்லும் வழியில் உள்ள வெங்காய குடோனில் இருந்த செல்வராஜூவை, 'இன்னோவா' காரில் நான்கு பேர் கடத்தினர். அன்று மாலை, சரண்யாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கும்பல், 'கணவரை விடுவிக்க, 21 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் நிலத்தை கிரயம் செய்து தரவேண்டும்' என தெரிவித்ததோடு, கோபிசெட்டிப்பாளையம், குள்ளம்பாளையம் தேங்காய் நார் மில்லில், அவரை வைத்திருப்பதாக தெரிவித்தனர். சரண்யா புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார் செல்வராஜூவை, மில்லில் இருந்து நேற்று மீட்டனர். இதுதொடர்பாக, சென்னையை சேர்ந்த விக்னேஷ், 30, கோபிசெட்டிப்பாளையம் பிரபு, 26, குல் முகமது, 25, கி ?ஷார், 19, ஆகியோரை, போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X