பொது செய்தி

தமிழ்நாடு

போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த நான்கு ஊராட்சி செயலர் பணி நீக்கம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் மாவட்டத்தில், போலி கல்வி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த, நான்கு ஊராட்சி செயலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.வேலூர் மாவட்டத்தில், 247 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் பணியாற்றி வந்த செயலாளர்கள், போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்ததாக புகார்கள் வந்தன. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து செயலாளர்களின் கல்வி சான்றிதழ்களின், உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், போலி கல்வி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த, நான்கு ஊராட்சி செயலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


வேலூர் மாவட்டத்தில், 247 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் பணியாற்றி வந்த செயலாளர்கள், போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்ததாக புகார்கள் வந்தன. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து செயலாளர்களின் கல்வி சான்றிதழ்களின், உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், மோர்த்தானா ஒன்றிய செயலாளர் விநாயகம், பேர்ணாம்பட்டு ஒன்றியம், பரவகல் ஊராட்சி செயலாளர் லோகநாதன், பாலூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ஏரந்தாங்கல் செயலாளர் ராஜா ஆகிய நான்கு பேர் போலி சான்றிதழ் கொடுத்து, 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சி வளர்ச்சித்துறை இயக்குனர் உத்தரவுபடி, நான்கு செயலாளர்களையும் பணி நீக்கம் செய்து, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேற்று உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X