பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களை நிறுத்தினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

Added : செப் 04, 2021
Share
Advertisement
வேலூர்: ''எனக்கு தெரியாமல் பஸ்களை நிறுத்தினால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலூர் மாவட்டம், பொன்னையில் புதிய வழிதட பஸ்கள் இயக்கம், ஏற்கனவே நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கம் செய்யும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பஸ்களை

வேலூர்: ''எனக்கு தெரியாமல் பஸ்களை நிறுத்தினால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.


வேலூர் மாவட்டம், பொன்னையில் புதிய வழிதட பஸ்கள் இயக்கம், ஏற்கனவே நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கம் செய்யும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பஸ்களை இயக்கி வைத்து, 7.39 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: பொன்னையில் அரசு பஸ்களை நான் இயக்கி வைக்கிறேன். அதிகாரிகள் எனக்கு தெரியாமல் பஸ்களை நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 40 கோடி ரூபாய் செலவில் பொன்னையாற்றுக்கு புதிய பாலம் அமைக்கப்படும். இந்த தொகுதிக்கு தொடர்ந்து இது போன்ற நலத்திட்டங்கள் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் தேர்தலில் தோற்று விடுவேனோ என மாற்றி ஓட்டு போட்டீர்கள். இருந்தாலும் ஜெயித்துவிட்டேன். உங்களுக்கு தொடர்ந்து நன்மை செய்து வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X