பொது செய்தி

தமிழ்நாடு

பணியின் போது ராணுவ வீரர் விபத்தில் பலி; சொந்த ஊரில் அடக்கம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கண்ணமங்கலம்: திருவண்ணாமலை அருகே, ராணுவ வீரர் பணியின்போது விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல், நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 37. இவர், 21 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது, பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் அவில்தாரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அமுதா,

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை அருகே, ராணுவ வீரர் பணியின்போது விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல், நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 37. இவர், 21 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது, பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் அவில்தாரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அமுதா, 32. கடந்த, 25 நாட்களுக்கு முன்பு விடுமுறை முடிந்து, சொந்த ஊரில் இருந்து தன் மனைவி அமுதாவுடன், ஆறுமுகம் பணிக்கு சென்றார். கடந்த, 30ல், பஞ்சாபில் இருந்து ராஜஸ்தான் செல்ல ஆறுமுகம், மனைவி அமுதாவிடம் சொல்லி விட்டு ராணுவ வண்டியில் புறப்பட்டு சென்றார். மேலும், குப்பம் கிராமத்தில் உள்ள தனது உறவினர்களிடமும் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 2ல், ராணுவ அதிகாரிகள், குப்பம் கிராமத்தில் உள்ள பெற்றோருக்கு, ஆறுமுகம் விபத்தில் இறந்துவிட்டதாக போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு ஆறுமுகம் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆறுமுகம் உடல் சொந்த ஊரான குப்பம் கிராமத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X