சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவிட்சை தவறுதலாக ஆப் செய்து வேலை செய்த மின் ஊழியர் பலி

Added : செப் 04, 2021
Share
Advertisement
பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டில், டிரான்ஸ்பார்மர் சுவிட்சை தவறுதலாக ஆப் செய்து விட்டு, வேலை செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே பலியானார்.வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் பட்டாபி, 37. இவர் பேர்ணாம்பட்டு மின் வாரியத்தில், தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை அப்பகுதியில் மின் பழுது ஏற்பட்டது. இதை சரி செய்ய புறவழிச்சாலையில் உள்ள

பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டில், டிரான்ஸ்பார்மர் சுவிட்சை தவறுதலாக ஆப் செய்து விட்டு, வேலை செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே பலியானார்.


வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் பட்டாபி, 37. இவர் பேர்ணாம்பட்டு மின் வாரியத்தில், தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை அப்பகுதியில் மின் பழுது ஏற்பட்டது. இதை சரி செய்ய புறவழிச்சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது மாலை, 4:00 மணிக்கு பட்டாபி ஏறி ஒயர்களை சரி செய்ய முயன்ற போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலேயே அவர் இறந்தார். பேர்ணாம்பட்டு மின்சாரத்துறையினர் விசாரணை செய்தனர். அதில், அந்த பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. வடக்கு பக்கத்தில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது. அவர் வடக்கு பக்க டிரான்பார்மர் ஸ்விட்சை ஆப் செய்வதற்கு பதிலாக, தெற்கு பக்க டிரான்ஸ்பார்மர் சுவிட்சை ஆப் செய்து விட்டு ஒயர்களை சரி செய்ததால், மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அவரது உடல் மீட்கப்பட்டது. இறந்த பட்டாபிக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X