சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கிலிருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பஸ்சில் சிக்கி பலி

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஆரணி: ஆரணி அருகே, வேகத்தடையில் சென்ற போது, பைக்கிலிருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சோமதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு, 38, இவரது மனைவி பிரியா, 34. இவர்களுக்கு சுஜித், 2, என்ற மகன் உள்ளார். பிரியா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்திற்கு, ஹீரோ ஹோண்டா பைக்கில்

ஆரணி: ஆரணி அருகே, வேகத்தடையில் சென்ற போது, பைக்கிலிருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சோமதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு, 38, இவரது மனைவி பிரியா, 34. இவர்களுக்கு சுஜித், 2, என்ற மகன் உள்ளார். பிரியா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்திற்கு, ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தனர். குன்னத்தூர் அருகே சென்றபோது, அங்கிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கினர். அப்போது நிலை தடுமாறி பிரியா தவறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் வேலூரிலிருந்து, விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ், பிரியாவின் மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X