போலீஸில் திருமணமான காதல்ஜோடி தஞ்சம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸில் திருமணமான காதல்ஜோடி தஞ்சம்

Added : செப் 04, 2021
Share
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை டி.எஸ்.பி., ஆபிஸில் ஆற்காடு பகுதியைச்சேர்ந்த திருமணமான காதல்ஜோடி தஞ்சமடைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்ன குக்குந்தியைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் பக்கத்து ஊரான பாப்பேரியைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். சுனில் குமாரின் தந்தை வேதபுரி பாரதிய ஜனதா கட்சி ஆற்காடு ஒன்றிய

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை டி.எஸ்.பி., ஆபிஸில் ஆற்காடு பகுதியைச்சேர்ந்த திருமணமான காதல்ஜோடி தஞ்சமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்ன குக்குந்தியைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் பக்கத்து ஊரான பாப்பேரியைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சுனில் குமாரின் தந்தை வேதபுரி பாரதிய ஜனதா கட்சி ஆற்காடு ஒன்றிய தலைவராக உள்ளார். அவரது மகனின் திருமணத்தை ஏற்ற வேளையில் அர்ச்சனா வீட்டில் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இருவரது பெற்றோரும் சம்மதிக்க வேண்டும் என்றும் ராணிப்பேட்டை டி.எஸ்.பி., அலுவலகத்தில் சுனில் குமார்,அர்ச்சனா இருவரும் தஞ்சமடைந்தனர்.
இதனையடுத்து டி.எஸ்.பி., பிரபு உத்தரவின்பேரில் சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசார் காதல் தம்பதியினர் இருவரையும் அழைத்துச்சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X