கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா காவல்: 17ம் தேதி வரை நீட்டிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு: பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிற்கு, 17ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது. பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று மாணவியரின் புகாரை அடுத்து, மாமல்லபுரம் அனைத்து மகளிர்

செங்கல்பட்டு: பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிற்கு, 17ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது. பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று மாணவியரின் புகாரை அடுத்து, மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உடைந்தயாக இருந்த ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டு, சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், சிவசங்கர் பாபா மீது, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ், மூன்று வழக்குகள் பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை, காவல் நீட்டிப்புக்காக, நேற்று புழல் சிறையில் இருந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அங்கு, நீதிபதி விடுமுறை என்பதால், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் மாலை, 3:00 மணிக்கு, சிவசங்கர்பாபாவை, நீதிபதி அம்பிகா முன் ஆஜர்படுத்தினர். வரும், 17ம் தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை பாதுகாப்புடன், போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.சிவசங்கர் பாபாவை விடுவிக்கக் கோரி, நீதிமன்றம் அருகில் அவரின் ஆதரவாளர்கள், ௫௦ பேர் திரண்டு கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X