ராகுலுக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ராகுலுக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு

Added : செப் 04, 2021
Share
மதுரை: பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் எடுத்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்ட காங்.,- எம்.பி.,ராகுலுக்கு எதிராக நடவடிக்கை கோரியதில், தகுந்த நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேட மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தாக்கல் செய்த மனு: டில்லியில் 9 வயது சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.

மதுரை: பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் எடுத்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்ட காங்.,- எம்.பி.,ராகுலுக்கு எதிராக நடவடிக்கை கோரியதில், தகுந்த நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேட மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தாக்கல் செய்த மனு: டில்லியில் 9 வயது சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து காங்.,-எம்.பி.,ராகுல் ஆறுதல் கூறினார். அக்குடும்பத்தினருடன் எடுத்த போட்டோவை அரசியல் லாபத்திற்காக தனது டுவிட்டரில் வெளியிட்டார். அவரது பதிவை மாணிக்கம் தாகூர் எம்.பி., உட்பட காங்., தலைவர்கள் பலர் மறுபதிவு செய்துள்ளனர்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் ,அவர்களது குடும்பத்தினரின் அடையாளம், முகவரியை வெளியிடுவதை சட்டம் தடை செய்கிறது. ராகுல், மாணிக்கம் தாகூர் , மறுபதிவேற்றம் செய்தவர்களுக்கு எதிராக மதுரை போலீஸ் கமிஷனர், அண்ணாநகர் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீன் குமார், ''இந்நீதிமன்றத்தில் எவ்வித நிவாரணமும் வழங்க இயலாது. தகுந்த நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடலாம். மனு திருப்பி அனுப்பப்படுகிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X