வேலுார்: மழை காரணமாக வியாபாரிகள் வராததால் பொய்கை மாட்டு சந்தையில் விற்பனை வெகுவாக குறைந்தது.
வேலுார் மாவட்டம், வேலுார் அருகே பொய்கையில் வாரந்தோறும் மாட்டுச் சந்தை நடக்கும். வழக்கமாக 2,000 மாடு, ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாவது வழக்கம். ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு கால்நடைகளை வாங்கிச் செல்வர்.
உள்ளூர் மக்கள் கோழிகளையும், மாடுகளுக்கு போடும் கயிறு, லாடம், கொம்புகளுக்கு பூசும் சாயம், கால்நடை தீவனத்தை வாங்கிச் செல்வர். இதனால் இந்த சந்தை காலை முதல் மாலை வரை பரபரப்பாக இயங்கும்சில சமயம் மதியம் 12:00 மணிக்குள் சந்தைகள் முடிந்து விடும்.
இந்நிலையில் இன்று காலை 6:00 மணிக்கு சந்தை தொடங்கியது. 3 கோடி ரூபாய் மதிப்புக்கு உள்ளூர்விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் மதியம் 1:00 மணி வரை 40 லட்சம் ரூபாய்க்கு மட்டும் கால்நடைகள் விற்பனையானது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விடிய விடிய மழை பெய்து வருவதால் சந்தையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்ததால் விற்பனை மந்தமாக இருந்தது என்று கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE